அவுஸ்திரேலியாவில் ஸ்வஸ்திகா சின்னத்திற்கு தடை
ஜெர்மனியில் நாஜி கட்சியின் சின்னமான ஸ்வஸ்திகாவை அவுஸ்திரேலியாவில் தடை செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த அடையாளத்தைப் பயன்படுத்தி தீவிர வலதுசாரிக் குழுக்களின் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளதே இந்த முடிவுக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த அடையாளத்தைக் காட்டினால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்து மதம், பௌத்தம் மற்றும் ஜைன மதத்தின் புனித சின்னமான பண்டைய கொக்கி குறுக்கு வடிவமைப்பு, நாஜி கட்சியின் சின்னமாக பெறப்பட்டது.
எனினும் புதிய சட்டத்தினால் அந்த மதங்களின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)