விளையாட்டு

விராட் கோலியின் சாதனையை முறியடிக்க முயற்சிக்கும் சூர்யகுமார்

சர்வதேச டி20 போட்டியில் விராட் கோலியின் நீண்ட கால சாதனையை சமன் செய்யவுள்ளார் சூர்யகுமார் யாதவ்.

ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த உடனே, இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் ஒதுக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான களமிறங்கிய இளம் அணி 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது.

இந்த தொடரை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் மூலம் டி20 போட்டியில் விராட் கோலியின் நீண்ட கால சாதனையை சமன் செய்யவுள்ளார் சூர்யகுமார் யாதவ்.

இதில், நேற்று நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால், அடுத்த போட்டியில் கோலியின் சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. 55 இன்னிங்ஸ்களில் 1985 ரன்களை எட்டியுள்ள சூர்யகுமார் யாதவ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்தால் விராட் கோலியின் சாதனையை சமன் செய்வார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை படைக்கவுள்ளார். உலகின் நம்பர் ஒன் டி20 பேட்டர் தரவரிசையில் இருக்கும் சூர்யகுமார், தற்போது நட்சத்திர வீரரான விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் உள்ளார்.

அதாவது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற இன்னும் 15 ரன்கள் மட்டுமே உள்ளது. 56 போட்டிகளில் மைல்கல்லை எட்டிய கோலியின் இந்த சாதனையை முறியடிக்கும் முனைப்பில் இருக்கிறார். டி20 போட்டிகளில் தலா 52 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை எட்டிய பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் சர்வதேச சாதனை படைத்துள்ளனர். பாபர், ரிஸ்வான் மற்றும் கோலியுடன் ஒப்பிடுகையில், சூர்யாவின் பேட்டிங் நிலை குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ