பொழுதுபோக்கு

வைரலாகும் சூர்யா – ஜோதிகாவின் குடும்ப புகைப்படம்…

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தங்களுடைய மகள் – மகனுடன், இந்த வருட தீபாவளியை கொண்டாடி உள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன் என்கிற அடையாளத்துடன் ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தில் அறிமுகமான சூர்யா, அடுத்தடுத்து சில தோல்வி படங்களில் நடித்தாலும், பின்னர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக மாறினார்.

‘காக்க காக்க’ திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகாவுடன் நடித்த போது இருவருக்கும் இடையே இருந்த நட்பு காதல் துளிர் விட்டது. பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் இருவரும் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகன் உள்ளனர்.

அஜித்தை போல் முடிந்தவரை, தங்களுடைய குழந்தைகள் மீது கேமராவின் நிழல் படாமல் தவிர்த்து வரும் சூர்யா – ஜோதிகா இருவரும் அவ்வப்போது குடும்ப நிகழ்வுகளின் போது எடுத்து கொள்ளும் புகைப்படங்களை மட்டுமே வெளியிடுகின்றனர்.

See also  ஜெயம் ரவியின் “பிரதர்” பட ட்ரெய்லர் வெளியானது

இந்நிலையில் ஜோதிகா – சூர்யா ஜோடி, இந்த ஆண்டு தங்களுடைய குழந்தைகளுடன் மும்பையின் கொண்டாடியதாக கூறப்படுகிறது பொதுவாக, சூர்யா – ஜோதிகா ஜோடி தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷங்களை சென்னையில் உள்ள சூர்யாவின் பெற்றோருடன் தான் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த முறை மும்பையில் கொண்டாடியுள்ளனர்.

(Visited 3 times, 3 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content