காகங்கள் தொடர்பில் வெளியான ஆச்சரியமளிக்கும் தகவல்

காகங்களால் வாய்விட்டு நான்கு வரை எண்ண முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
புதிதான மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
எண்ணுவது மட்டுமல்லாமல் ஓர் எண்ணைப் பார்க்கும்போது அவற்றால் அந்த எண்ணுக்கேற்ப அத்தனை முறை சத்தத்தை எழுப்ப முடியம்.
குழந்தைகள் கற்கும் முறையைப்போல காகங்களும் எண்ணக் கற்பதாக ஆய்வாளர்கள் கூறினர்.
ஜெர்மனியில் உள்ள Tübingen பல்கலைக்கழகத்தின் விலங்கு உடலியல் பிரிவு நடத்திய ஆய்வு அந்த விவரங்களைக் கண்டுபிடித்தது.
Science எனும் ஆய்விதழில் கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டன. காகங்களின் புத்திசாலித்தனம் ஆச்சரியத்துக்குரியது அல்ல என்று ஆய்வாளர்கள் கூறினர்.
குரங்கு, ஆண் தவளை, எறும்பு ஆகியவற்றாலும் எண்களை எண்ண முடியும் என்று நம்பப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
(Visited 29 times, 1 visits today)