பொழுதுபோக்கு

பாலியல் சர்ச்சை – நடிகை சன்னி லியோன் என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?

கேரளா திரையுலகம் பற்றியும், திரை துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான பிரச்சினை பற்றியும் தொடர்ச்சியாக பலர் பேசி வரும் நிலையில், இன்று கொச்சியில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்று பேசிய பிரபல நடிகை சன்னி லியோன், இதுகுறித்த தனது கருத்தினை வெளியிட்டு இருக்கிறார்.

“திரைத்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு பெண்களும், நோ சொல்ல வேண்டிய இடத்தில் கட்டாயம் அதை சொல்லியே ஆக வேண்டும். மேலும் தங்களுக்கு வாய்ப்புகளுக்கு பதிலாக பிரச்சனைகள் தான் கிடைக்கிறது என்றால், அந்த இடத்தில் இருந்து வெளியேற கொஞ்சம் கூட அவர்கள் தயங்கவே கூடாது”.

“நமது எல்லைகள் என்ன என்பதை நாம் மட்டுமே தீர்மானிக்க வேண்டும், அதன் மூலம் நமக்கு சினிமா துறையில் இழப்புகள் ஏற்படுகிறது என்றாலும், அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் உறுதியுடன் நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும்” என்று அவர் பேசியிருக்கிறார்.

அதேபோல இந்த நிகழ்ச்சியில் நடிகை சன்னி லியோனோடு பங்கேற்ற பிரபல நடிகர் பிரபு தேவாவும் இந்த விவகாரத்தில் நடிகைகளுக்கு தொல்லை கொடுக்கும் அனைவரும் நீதிக்கும் நியாயத்திற்கும் உட்பட்டு கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

(Visited 6 times, 2 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்