பிரித்தானியா பாடசாலைகளில் கையடக்க தொலைபேசிகளுக்கு தடை – பிரதமர் அதிரடி
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பிரித்தானியாவில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் கையடக்க தொலைபேசிகளுக்கு தடை விதித்துள்ளார்.
பிரதமர் சுனக் X வலைத்தளத்தில் வீடியோ செய்தியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மேல்நிலைப் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொலைபேசியால் சீர்குலைந்ததாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தங்கள் வளாகங்களில் கையடக்க தொலைபேசிகளை தடை செய்த பாடசாலைகள் ‘சிறந்த கற்றல்’ சூழலுக்கு வழிவகுத்துள்ளதாக பிரதமர் கூறினார்.
இங்கிலாந்தில் அரசாங்க வழிகாட்டுதலின் கீழ், இடைவேளை நேரங்கள் உட்பட பாடசாலைகளில் நாள் முழுவதும் கையடக்க தொலைபேசிகளின் பயன்பாட்டை தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பார்கள் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.





