உலகம் செய்தி

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீது தாக்குதல் – ஓமான் கடும் கண்டனம்

கட்டார் (Qatar), ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) மற்றும் சவூதி அரேபியா (Saudi Arabia) ஆகிய நாடுகளில் உள்ள எரிசக்தி தளங்கள் மீது ஈரான் (Iran) நடத்திய தாக்குதல்களை ஓமான் சுல்தானகம் (Oman) கண்டித்துள்ளது.

அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, சர்வதேச சட்டங்களையும் நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பது அவசியம் என்றும் ஓமான் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் வசதிகள் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் ஓமான் வலியுறுத்தியுள்ளது.

இந்த அறிக்கை X  தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதன்கிழமை கட்டாரின் ராஸ் லஃபான் (Ras Laffan) எரிசக்தி வளாகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த கண்டனம் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹப்ஷான் (Habshan) எரிவாயு நிலையம் மற்றும் பாப் (Bab) எரிவாயு வயல் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதி மற்றும் தலைநகர் ரியாத் (Riyadh) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!