மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள் – பறிதாபமாக உயிரிழந்த பெண்!
மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து குதித்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நேற்று (23) மாலை 7.15 மணியளவில் குறித்த இளம் பெண் பாலத்தில் இருந்து குளத்தில் குதித்தார், அப்போது மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் குழுவொன்று இதனை அவதானித்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பிரதேசவாசிகளுடன் இணைந்து யுவதியின் உடலை மீட்டுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த இளம் பெண் கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி என்றும், காதல் விவகாரம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
இளங்கோ விதுஷாலினி என்ற 20 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை , மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 23 நாட்களில் மாத்திரம் 16 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.




