ஜப்பானில் மாணவர்களிடையே அதிகரிக்கும் தற்கொலை வழக்குகள் – புதிய பிரச்சாரம் ஆரம்பம்!
ஜப்பானில் இளம் வயதினரிடையே தற்கொலை முயற்சி சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் மூலம் தீர்வுகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
புதிய பிரச்சாரத்தின் கீழ், துன்பத்தில் இருக்கும்போது குழந்தைகள் பெரியவர்களிடம் வசதியாக ஆலோசனை நடத்தக்கூடிய சூழல்களை உருவாக்குவதை தன்னார்வலர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஜப்பானில் ஒட்டுமொத்த தற்கொலை விகிதம் குறைந்திருந்தாலும், சுகாதார அமைச்சக தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் தொடக்க மற்றும் சீனியர் உயர்நிலை பாடசாலைகளைச் சேர்ந்த 527 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





