பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்சென்ற பேருந்துமீது தற்கொலைக் குண்டு தாக்குதல்!

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இன்று (21.05) ஒரு பள்ளிப் பேருந்து மீது தற்கொலை கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் 38 பேர் காயமடைந்தனர் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பலுசிஸ்தான் மாகாணத்தின் குஸ்தார் மாவட்டத்தில், நகரத்தில் உள்ள பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்தில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை, இருப்பினும் சந்தேகம் பலுச் இனப் பிரிவினைவாதிகள் மீது விழ வாய்ப்பில்லை, அவர்கள் பெரும்பாலும் பாதுகாப்புப் படையினரையும் பொதுமக்களை மாத்திரமே குறிவைப்பதாக உள்ளூர் துணை ஆணையர் யாசிர் இக்பால் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்ததோடு, குழந்தைகளின் இறப்புகளுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்தார்.