இலங்கை

போதிய அளவான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – காஞ்சன விஜேசேகர!

அரசாங்கத்திடம் தற்போது போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்திடம் 133,936 மெற்றிக் தொன் டீசலும் 6192 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடம் 35,402 மெற்றிக் தொன் ஒக்டேன் 92 பெற்றோல் 5367 மெற்றிக் தொன் ஒக்டேன் 95 ரக பெற்றோலும் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இன்று (23.07) காலை நிலவரப்படி அரசிடம் 30,173 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக அரசாங்கத்தின் எரிபொருள் இருப்பில் சில குறைப்புக்கள் காணப்பட்ட போதிலும் அது மீளமைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!