ரஷ்யாவில் திடீரென மூடப்பட்ட விமான நிலையம் – மறைக்கப்பட்ட காரணம்
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் உள்ள புல்கொவோ விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் திடீரென இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பொதுமக்கள் பயணம் செய்யும் விமானங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏன் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. காரணம் மறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் உக்ரைன் ஆகாயத் தாக்குதல்களை நடத்தும் அபாயத்தால் முன்பு ரஷ்ய விமான நிலையங்கள் மூடப்பட்டன..
விமானச் சிப்பந்திகளும் அதிகாரிகளும் பாதுகாப்பை உறுதிசெய்ய ஆன அனைத்தையும் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
(Visited 7 times, 1 visits today)