பிரான்ஸில் திடீர் சூறாவளி – ஒருவர் பலி, பலர் படுகாயம்!

பிரான்ஸின் பாரிஸ் (Paris) அருகே உள்ள வால்-து-வாஸ் (Val-d’Oise) மாவட்டத்தில் தாக்கிய பயங்கர சூறாவளி (Tornado) பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூறாவளியில் சிக்கி 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்தனர்.
எர்மோ நகரில் கட்டுமானப் பணியில் இருந்த மூன்று ராட்சத கிரேன்கள் சரிந்தன, பல வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
அதிகாரிகளால் எதிர்பாராத, மிகவும் குறுகிய மிகத்தீவிரமான வானிலை நிகழ்வு என இது விவரிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு 80 தீயணைப்பு வீரர்கள், 50 காவல்துறையினர் உள்ளிட்டோர் விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
நெடுஞ்சாலைகளிலும் தொடருந்து சேவைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 6 visits today)