இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் விலை திடீர் அதிகரிப்பு

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை உயர்த்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 361 ரூபாவாகும். 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 417 ரூபாவாகும்.

லங்கா டீசல் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 341 ரூபாவாக பதிவு செய்யப்படவுள்ளது. லங்கா சுப்பர் டீசல் விலையும் ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 359 ரூபாவாகும்.

இலங்கை மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 231 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள விலைகளுக்கு ஏற்ப ஐஓசி எரிபொருள் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை