இலங்கை செய்தி

நாடு முழுவதும் திடீர் சுற்றிவளைப்பு!!! 100க்கும் மேற்பட்டவர்கள் கைது

“ஒப்பரேஷன் ஜஸ்டிஸ்” என்ற பெயரில் இன்று ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுவினருக்கு எதிரான விசேட நடவடிக்கையின் கீழ் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 2 கோடிக்கும் அதிகமான பெறுமதியான 100 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா ஜா எல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இது இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, 68 கிலோ 305 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த பெண் ஒருவர் கிளிநொச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதிபுரம் பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் 180 வீடுகள் மற்றும் 400 பேரை சோதனையிட்டதன் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 23ஆம் திகதி வரை இந்த சுற்றிவளைப்புகள் தொடரும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை