ஜெர்மனியில் திடீர் மாற்றம் – அதிகரித்த மக்கள் தொகை
ஜெர்மனியில் தற்பொழுது 84.7 மில்லியனாக மக்கள் தொகை அதிகரித்துள்ளதென புள்ளி விபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டில் மொத்தமாக குடியேறியவர்களுடைய எண்ணிக்கையானது 3 லட்சமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளையில் 2023 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த குழந்தைகளுடைய எண்ணிக்கையானது அண்ணளவாக 7 லட்சமாக இருப்பதாகவும், மேலும் 2023 ஆம் ஆண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 1020000 ஆக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியுடைய சனத்தொகை இவ்வாறு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டில் இருந்து ஜெர்மன் நாடடுக்கு வந்தவர்களின் எண்ணிக்கையானது 1.1 மில்லயன் ஆக இருந்ததாகவும், இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டுக்குள் வந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையானது 1.14 மில்லியன் ஆக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த காரணத்தினால் ஜெர்மனியில் குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு இருந்தாலும், வெளிநாட்டவர்களின் குடியேற்றம் அதிகரிப்பட்டு இருப்பதால் ஜெர்மன் சனத்தொகையானது இவ்வாறு 84.7 மில்லியனாக உயர்வடைந்துள்ளதாக புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.