மகப்பேறு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய சூடான் துணை ராணுவப் படை ;460 பேர் பலி
 
																																		சூடானில் மகப்பேறு மருத்துவமனையில் 460 பேரை அந்நாட்டு துணை ராணுவப் படை(RSF) கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ்(General Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 2023 முதல் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்துவருகிறது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை(28), தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் நகர மகப்பேறு மருத்துவமனைக்குள் இருந்த நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை ராணுவ படையினர் கொடுரமாகக் கொன்றனர் என்று உள்ளுர் மக்கள் தெரிவித்தனர்.
நூற்றுக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டகாக வந்த அறிக்கைகள் அதிர்ச்சியை அளிப்பதாக டெட்ரோஸ் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி 1 முதல் அக்டோபர் 20 வரை எல்-பாஷரில் 1,350 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறியிருந்த நிலையில் தற்போதைய படுகொலைகள் நடந்துள்ளன.
 
        



 
                         
                            
