உள்நாட்டு போரின் போது இனப்படுகொலை செய்த சூடான் இராணுவம் – 1700 பேர் பலி!
கடந்த 2023 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது சூடான் விமானப்படை நடத்திய தாக்குதல்களில் 1,700 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உள்நாட்டுப் போரின் போது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் குறித்த விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பாடசாலைகள் மற்றும் முகாம்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
அறிக்கைகளின்படி, ஏப்ரல் 2023 முதல் ஜூலை 2025 வரை 384 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் சூடான் இராணுவத்தினர் போர் குற்றங்களை செய்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




