பிரபல வாரிசு நடிகரின் கால் துண்டாக வெட்டி எடுக்கப்பட்டது…..
கன்னட திரையுலகின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாசின் மகன் சூரஜ் குமார். இவர் கன்னட சினிமாவில் பிரபல நடிகராக உள்ளார்.
சூரஜ் கடந்த சனிக்கிழமை தன் இரு சக்கர வாகனத்தில் மைசூரில் இருந்து ஊட்டிக்கு சென்றுள்ளார்.
அப்போது டிராக்டர் ஒன்றை முந்தி செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த சூரஜ் குமார் மைசூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சூரஜ் குமாரின் உயிரை காப்பாற்றும் பொருட்டு மருத்துவர்கள் பலத்த சேதமடைந்த அவரின் வலது காலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூரஜுக்கு ஏற்பட்டுள்ள இந்த பரிதாப நிலை ரசிகர்களையும், திரையுலகினரையும் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

(Visited 10 times, 1 visits today)





