இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தரமற்ற டீசல்
லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் (எல்ஐஓசி) ஆடர் செய்த எரிபொருள் கப்பலில் இருந்த 11,000 மெட்ரிக் தொன் டீசல் தரமற்றது என ஆய்வக சோதனைகள் உறுதி செய்துள்ளன.
தரமற்ற டீசலை இறக்குவது இடைநிறுத்தப்பட்டதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய பங்கு சேமிப்பு முனைய நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தர்ஷன ரத்நாயக்க தெரிவித்தார்.
இரண்டாவது ஆய்வக சோதனையில் 8,400 மெற்றிக் தொன் டீசல் தரநிலையில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த டீசல் மட்டுமே கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இறக்கப்பட்டதாக அவர் கூறினார்.
கொழும்பு துறைமுகத்திற்கு கடந்த 5ஆம் திகதி எம்.டி. ஃபோஸ் பவர் என்ற கப்பல், பெற்றோல் மற்றும் டீசலை ஏற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 1 visits today)