2024 பட்ஜெட் இலக்குகளை அடைவது குறித்த Fitch மதிப்பீடுகளின் முன்னறிவிப்பு
2024ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இலக்குகள் அடுத்த ஆண்டு தொடரும் என எதிர்பார்க்கப்படும் பொருளாதார மீட்சியின் போதும் சவாலானதாக இருக்கும் என Fitch Ratings கூறுகிறது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள Fitch மதிப்பீட்டு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
வங்கி மறுமூலதனச் செலவுகளைத் தவிர்த்து, புதிய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.1% என்ற தற்போதைய கணிப்பில் இருந்து நிதிப் பற்றாக்குறை விரிவடையும்.
இந்நிலையில், ஜிடிபிக்கு வருமான விகிதம் அனுமானத்தை விட குறைவாக இருக்கும் என்றும் Fitch Ratings குறிப்பிட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)