நைஜீரியாவில் கிறிஸ்தவ பாடசாலையில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட மாணவர்கள்!
நைஜீரியாவில் அண்மையில் 25 மாணவிகள் கடத்தப்பட்ட நிலையில் தற்போது 52 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நைஜர் மாநிலத்தின் பாபிரி (Papiri)சமூகத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் (St. Mary’s) பாடசாலையில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உள்ளுர் ஊடகங்கள் 52 குழந்தைகள் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
“காவல்துறை தந்திரோபாயப் பிரிவுகள், இராணுவக் குழுக்கள் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, கடத்தப்பட்ட மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்காவில் ஆயுதம் ஏந்திய குழுவினர் பள்ளிக் குழந்தைகளை இலக்கு வைத்து இவ்வாறான கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 2 visits today)




