பிரித்தானியாவில் பலத்த காற்று – மஞ்சள் எச்சரிக்கை
பிரித்தானியாவின் வடக்கு, வடக்கு வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை அலுவலகம் மஞ்சள் எச்சரிக்கை அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை காலை முதல் இரவு 8 மணி வரை பலத்த காற்று மற்றும் பனி அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் காற்று 50–60 மைல் வேகத்திற்கு உயரக்கூடும் என்பதுடன் ஹெப்ரைட்ஸ் பகுதியில் சில நேரங்களில் மிகவும் வலுவாக வீசக்கூடும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஸ்கொட்டிஷ் படகுகளில் தாமதங்கள் அல்லது இரத்து செய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயணிகள் புறப்படுவதற்கு முன் பயண அறிவிப்புகளை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
வடக்கு இங்கிலாந்து, வடக்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் வடக்கு வேல்ஸில் காலை வரை காற்று அதிகரிக்கும்; பிற்பகல் வரை காற்று உச்சத்தை எட்டாது, ஆனால் சில இடங்களில் 70 மைல் வேகத்திற்கு மேல் காற்று வீசக்கூடும்.
பென்னைன்ஸ் மற்றும் செவியட் மலைகளில், கடற்கரைகள் மற்றும் மலை உச்சிகளில் பலத்த காற்று காரணமாக போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.





