துருக்கியில் வலுவான நிலநடுக்கம் பதிவு : அச்சத்தில் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!
வடமேற்கு துருக்கியில் இன்று (04.12) மிதமான வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கிய நிலையில், மக்கள் அச்சத்தில் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயங்கள் அல்லது சேதங்கள் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.
5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் புர்சா மாகாணத்தில் உள்ள ஜெம்லிக் நகருக்கு அப்பால் உள்ள மர்மாரா கடலில் மையம் கொண்டிருந்ததாக பேரிடர் மேலாண்மை நிறுவனமான AFAD தெரிவித்துள்ளது.
இஸ்தான்புல் மற்றும் அதன் அருகிலுள்ள பிற பகுதிகளில் மக்கள் அச்சத்தில் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறியதாக HaberTurk தொலைக்காட்சி கூறியது.
(Visited 3 times, 1 visits today)