பப்புவா நியூ கினியா அருகே வலுவான நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா அருகே இன்று ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான வலுவான நிலநடுக்கம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது பப்புவா நியூ கினியாவின் மேற்கே அமைந்துள்ள நியூ பிரித்தானிய தீவுக்கு அருகில் நிகழ்ந்தது.
தீவின் தலைநகரான கிம்பேவிலிருந்து தென்கிழக்கே 194 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்அதிர்வுகள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பப்புவா நியூ கினியாவிற்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)