பிரான்ஸில் கடுமையாகும் சட்டம்!
பிரான்ஸில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது பாகுபாடு காட்டுபவர்களுக்கு சட்டத்தை கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அவர்களுக்கு பாகுபாடு காட்டினால் அது தண்டனைக்குரிய குற்றம் என அரசு அறிவித்துள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளிட்ட மாற்று பாலினத்தவர் மீது தாக்குதல் அல்லது வன்முறை நிகழ்வதைக் தடுக்கும் வகையில் 100 திட்டங்களை கொண்ட சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் பால்புதுமையினர் மீது நாள்தோறும் தாக்குதல்கள் பதிவாகின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தனர்.
இந்நிலையில், அவர்களை பாதுகாக்கும் நோக்கில் 100 திட்டங்களை உள்ளடக்கிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பொது இடங்களில் பால்புதுமையினர் மீது பாகுபாடு காட்டுவது தொடர்பில் மிக கடுமையான இறுக்கம் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.