இலங்கை அரச ஊழியர்களுக்கு கடுமையாகும் சட்டம்!
இலங்கையில் அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது சேவைகள் ஆணைக்குழு இதனை குறிப்பிட்டுள்ளது.
அரசாங்க உத்தியோகத்தர்கள் அறிவிக்காமல் சேவைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் சில சந்தர்ப்பங்களில் சேவையில் இருந்து விலகுவதாக அறிவித்தல் வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆவது கண்காணிக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் பொதுச்சேவை ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
(Visited 72 times, 1 visits today)





