கொழும்பில் சாரதிகளுக்கு கடுமையாகும் சட்டம்!

கொழும்பிலுள்ள வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குவிதிகளை மீறும் வாகனங்களை கண்கானிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக கண்காணிப்பு கமராக்கள் ஊடாக அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 24ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களை அடையாளம் கண்டு, அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராத சீட்டுகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வாகன உரிமையாளர் வசிக்கும் பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்தின் ஊடாக இந்த அபராத சீட்டு வாகன உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 15 times, 1 visits today)