ஹார்முஸ் நீரிணை: ஈரானிடம் தென்கொரியா விடத்துள்ள கோரிக்கை!
தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
மத்திய கிழக்குப் போரால் உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தென்கொரியா வெளிவிவகார அமைச்சர் சோ ஹியுன் Cho Hyun வெளியிட்டார்.
அத்துடன், பதற்றத்தைத் தணிக்குமாறு ஈரானுக்கு அழைப்பு விடுத்தார்.
குறிப்பாக ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யுமாறு அவர் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi, இடம் கோரிக்கை விடுத்தார்.
அங்கு சிக்கியுள்ள தென் கொரியக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இந்த உரையாடலின் முக்கிய நோக்கமாக இருந்தது என தென்கொரிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.




