ஐரோப்பா

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலை உலுக்கும் புயல் : ஒருவர் உயிரிழப்பு!

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் முழுவதும் லியோனார்டோ (Leonardo) புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் 60 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நாடு முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன.

மேலும் ஸ்பெயினின் அண்டலூசியாவில் (Andalusia) 3,500 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவசர சேவைகள் மற்றும் இராணுவ வீரர்கள் உதவிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

போர்ச்சுகல் தனது எச்சரிக்கை அளவை அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது, அதிகரித்து வரும் வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க ஆயுதப்படைகள் படகுகளுடன் காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!