காசாவை தாக்கிய புயல் – 800,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!
காசாவை தாக்கிய பைரன் புயல் காரணமாக ஏறக்குறைய 800,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முகாம்களில் வசிக்கும் காசா மக்கள் கனமழை காரணமாக கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மோதல்களால் இடம்பெயர்ந்த குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்ற நிலையில் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
குளிர் மற்றும் மழை காலநிலை காரணமாக முகாம்களில் உள்ள குழந்தைகள் குறிப்பாக சிரமப்படுவதாகவும், கழிவு நீர் காரணமாக தொற்று நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





