வாழ்வியல்

என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லையா? இது தான் காரணம்

பலர் தங்களின் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள், ஆனால் எடை குறைவதாக தெரியவில்லை. தொடர் முயற்சிகள், உணவைத் தவிர்ப்பது மற்றும் உடற்பயிற்சி செய்த பிறகும் கொழுப்பு எரிக்கப்படாவிட்டால், நீங்களும் எடை இழப்பு தொடர்பான தவறுகளைச் செய்ய வாய்ப்புள்ளது.

உண்மையில், ஒரு வழக்கத்தை முயற்சிப்பது அல்லது அதே வகையான உடற்பயிற்சி செய்வது அல்லது அதே வகையான உணவை சாப்பிடுவது ஆகியவை எடை குறையாததற்கு காரணமாகிறது. அதே நேரத்தில், உடல் எடையை குறைப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும் பல பணிகள் உள்ளன, அவையும் முக்கிய காரணமாகலாம். எனவே உடல் எடையை குறைப்பதில் சிரமங்களை உருவாக்கும் சில எடை இழப்பு பழக்கங்கள் இங்கே கொண்டுக்கப்பட்டுள்ளது, அவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்.

பேக் செய்யப்பட்ட உணவுகளை உண்ணுதல்:

தற்போது நாம் ஆரோக்கியம் என்று எங்காவது எழுதிருந்தயவே அதை உடனே சாப்பிட தேர்வு செய்கிறோம். ஆனால், ஆரோக்கியமானது என்று அழைக்கப்படும் ஒவ்வொரு நிரம்பிய பொருட்களும் ஆரோக்கியமானவை அல்ல. பல பேக் செய்யப்பட்ட உணவுகளில் அதிக அளவு சர்க்கரை, சோடியம் மற்றும் ப்ரிசர்வேட்டிவ்கள் உள்ளன, இது எடை இழப்புக்கு (Weight Gain) பதிலாக எடை அதிகரிக்க வழிவகுக்கிறது.

காலை உணவைத் தவிர்ப்பது:

தினமும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில் அல்லது உடல் எடையை குறைக்கும் அவசரத்தில் நாம் காலை உணவை தவிர்கிறோம். அப்படி செய்வது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். ஏனெனில் காலை உணவு உடலுக்கு சக்தியை தருகிறது. இதனால் அன்றைய தினத்தின் முழு வேலையையும் சோர்வடையாமல் செய்யலாம்.

உடற்பயிற்சி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

பெரும்பாலான மக்கள், இன்றே பலன் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில், சீரான உடற்பயிற்சி செய்வதற்குப் பதிலாக, தொடக்கத்திலேயே அதிகமாக உடற்பயிற்சி செய்யத் தொடங்குகிறார்கள். முறையாக உங்கள் பயிற்சியாளரிடமிருந்து ஆலோசனையைப் பெற்று, பயிற்சி செய்ய வேண்டிய காலநேரத்தையும் அளவையும் நிர்ணயிக்கவும். புதிதாக ஒருவர் உடற்பயிற்சி செய்யத் தொடங்குகிறார் என்றால், முதலில் எளிதான பயிற்சிகளை செய்து, பின்ன மெதுமெதுவாக நேரத்தையும், பயிற்சியையும் அதிகரிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில், தேவைக்கு அதிகமாக செய்யக் கூடாது என்பதில், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

உணவை தவிர்ப்பது:

உணவு உண்ணும் நேரத்தை மனதில் கொள்ள வேண்டும், மேலும் உணவைத் தவிர்க்காமல் இருப்பது முக்கியம். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. உண்மையில், நீங்கள் உணவைத் தவிர்த்தால், உங்கள் எடை குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக, வளர்சிதை மாற்றமும் மெதுவாகத் தொடங்குகிறது மற்றும் அடுத்த உணவை நீங்கள் உட்கொள்ளும் போது அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதனால் உணவைத் தவிர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தினசரி பழக்க வழக்கத்தின் மீது கவனம்:

உடல் எடையை குறைக்க வேண்டுமானால், முதலில் இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இதற்கு உங்களின் அன்றாட பழக்க வழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இரவில் வெகுநேரம் விழித்திருந்து, பகலில் வெகுநேரம் வரை தூங்கினால், அது உங்கள் எடை குறைப்பு முயற்சிகள் வீணாக வழிவகுக்கும். எனவே தூங்கி எழும் நேரத்தை முடிவு செய்யுங்கள். தினசரி வேலைகளை திட்டமிடுவதன் மூலம் தினசரி அட்டவணையை தயார் செய்யலாம். இதைத் தொடர்ந்து பின்பற்றி வருவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்க முடியும்

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான