இலங்கை

இலங்கை – கல்வி மறுசீரமைப்பில் சட்டக் கல்வியை உள்வாங்க நடவடிக்கை!

இலங்கையில் மேற்கொள்ளப்படும் புதிய கல்வி மறுசீரமைப்பில் சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் அடிப்படை சட்டத்தை தெரிவு பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய (10.10) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “புதிய கல்வி மறுசீரமைப்பை நாங்கள் ஏற்கிறோம். புதிய தொழிற்றுறை மற்றும் உலகுக்கு பொருந்தும் வகையில் கல்வி திட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

பாடத்திட்டத்தில் சட்டத்தை கட்டாய பாடமாக்குவது குறித்து கடந்த 20 ஆண்டுகாலமாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. குடியுரிமை கல்வி பாடத்தை பெயர் மாற்றம் செய்து அதனை அடிப்படை சட்டம் மற்றும் குடியுரிமை கல்வி என்று அறிமுகப்படுத்தும் யோசனையை ஆளும் தரப்பின் உறுப்பினர் முன்வைத்துள்ளமை வரவேற்கத்தக்கது.

2026 ஆம் ஆண்டு முதல் குடியுரிமை கல்வியில் அடிப்படை சட்டத்தை பிரதான பகுதியாக உள்ளடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது.

நாம் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், சமயம் ஆகிய பாடங்களை தேவைக்காக கற்றுக்கொள்கிறோம். ஆனால் வாழ்க்கையில் சகல பகுதிகளுடனும் தொடர்புடைய சட்டத்தை கற்பதில்லை.

சட்டத்தை கற்பதும் சட்டமாக்கப்பட வேண்டும்.சட்டம் தெரியாது என்று குறிப்பிடுவது விடுவிப்புக்கான ஒரு காரணியாக கருதப்படமாட்டாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்