ஐரோப்பா செல்ல முயற்சித்த 89 குடியேற்றவாசிகளின் நிலை – உடல்கள் மீட்பு
அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து 89 குடியேற்றவாசிகளின் உடல்களை மீட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மொரெட்டேனியாவின் கரையோர காவல்படையினர் இதனை தெரிவித்துள்ளனர்.
ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் ஆனால் பலர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
செனெகல் கம்பியா எல்லையிலிருந்து 170 பேருடன் படகொன்று பயணம் புறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் மொரெட்டேனியாவின் தென்மேற்கு கடலோரப்பகுதியில் படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பா செல்ல முயலும் குடியேற்றவாசிகளிற்கான பிரதான இடைத்தங்கல் நாடாக மொரெட்டேனியா காணப்படுகின்றது.
ஆயிரக்கணக்கான படகுகள் குடியேற்றவாசிகளுடன் இங்கிருந்து புறப்படுவது வழமையாகும்.





