சிலியில் அவசரநிலை பிறப்பிப்பு : 20,000 பேர் வெளியேற்றம்!
சிலியின் தெற்கில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக் (Gabriel Boric) பேரழிவு நிலையை அறிவித்துள்ளார்.
குறித்த காட்டுத்தீ காரணமாக சுமார் 20,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிலியின் CONAF வனத்துறை நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் தீயணைப்பு வீரர்கள் 24 செயலில் உள்ள தீயை எதிர்த்துப் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ காரணமாக குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 250 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பலத்த காற்று மற்றும் அதிக வெப்பநிலை போன்ற பாதகமான சூழ்நிலைகள் காட்டுத்தீ பரவ உதவியதாகவும், தீயைக் கட்டுப்படுத்தும் தீயணைப்பு வீரர்களின் நிலை சிக்கலாகியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





