உலகம் செய்தி

பிரிட்டன் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும்: முன்னாள் பாதுகாப்பு பிரதானி பரிந்துரை

ஈரானுடனான போரின்போது அமெரிக்காவிற்கு ஆதரவாக பிரிட்டன் தனது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் சர் நிக் கார்ட்டர் , Gen Nick Carter தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தடைகளை நிவர்த்தி செய்வதற்கும் இத்தகைய இராணுவ நடவடிக்கை பிரிட்டனின் தேசிய நலனுக்கு மிகவும் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானிய கடற்படையின் பலத்தை விட புரட்சிகர காவல்படையின் ஏவுகணைகள் மற்றும் கண்ணிவெடிகள் போன்ற நவீன ஆயுதங்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன எனவும் எச்சரித்துள்ளார்.

இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க அமெரிக்கா தலைமையில் பல நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது கட்டாயம் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!