பஹ்ரைன் குறித்து பிரித்தானிய ஆதரவை பட்டத்து இளவரசரியிடம் விளக்கிய ஸ்டாமர்
பிரித்தானிய பிரதமர் ஸ்டாமர் இன்று காலை பஹ்ரைன் நாட்டின் பட்டத்து இளவரசர் Salman bin Hamad Al Khalifa அவர்களுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த உரையாடலில், வளைகுடா பிராந்தியத்தில் நடைபெற்று வரும் மோதல் நிலைமை குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
குறிப்பாக, பஹ்ரைன் (Bahrain) மீது சமீபத்தில் ஈரான் ( Iran) நடத்திய தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிடப்பட்டது.
பேச்சுவார்த்தையின் போது, ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள உதவுவதற்காக நிபுணர்கள் குழுவை அனுப்புவது உள்ளிட்ட, பஹ்ரைனுக்கு இங்கிலாந்து வழங்கி வரும் சமீபத்திய ஆதரவுகளை ஸ்டார்மர் விளக்கினார்.
மேலும், பிராந்திய பாதுகாப்பிற்காக அமெரிக்கா இங்கிலாந்தின் தளங்களை பயன்படுத்துவது குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்தார்.
இரு தலைவர்களும் முக்கியமான தேசிய உள்கட்டமைப்பு மற்றும் S ஹார்மோஸ் நீரிணை மீது தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்களை கண்டித்தனர்.
மேலும், ஈரானின் தாக்குதல்களை கண்டித்து பதற்றத்தை குறைக்க அழைப்பு விடுக்கும் இங்கிலாந்து தலைமையிலான கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டதற்காக, பட்டத்து இளவரசருக்கு ஸ்டார்மர் நன்றி தெரிவித்தார்.





