இன்றைய முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திசைமாற்றப்பட்ட ஸ்ரீலங்கன் விமானங்கள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான்கு விமானங்கள் தரையிறங்குவதற்காக வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சூழவுள்ள பகுதியில் இன்று காலை நிலவிய பனிமூட்டமான வானிலை காரணமாக வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.

பனியுடனான வானிலை காரணமாக விமானிகளால் ஓடுபாதையைச் சரியாக அவதானிக்க முடியாமையினால் குறித்த விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.

டுபாய், சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்குப் பயணித்த விமானங்களே இவ்வாறு வழிமாற்றப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் பனியுடனான வானிலை சீரடைந்ததன் பின்னர் குறித்த விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 37 times, 1 visits today)

SR

About Author

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன