உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை விளையாட்டு அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது!
விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு.ரொஷான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி சற்று முன்னர் ரொஷான் ரணசிங்கவிடம் கடிதம் வழங்கியதாக ரொஷான் ரணசிங்க இன்று (27.11) தெரிவித்தார்.





