வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இலங்கையின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன
அடுத்த வருடம் முதல் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுக் கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய ஊடகமொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
சீன ஆய்வுக் கப்பல் ஒன்று நாட்டின் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் தனது கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை தடை விதித்துள்ளது.
இலங்கையில் பயன்படுத்தப்படாத கடல் வளங்கள் இருப்பதாகவும், ஆய்வுகள் அவசியமானவை, ஆனால் வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தினார்.
(Visited 2 times, 1 visits today)