இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக உயர்ந்தது
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை 10.00 மணிக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, 356 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் 448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்காக நாடளாவிய ரீதியில் 1,385 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்முகாம்களில் 53,758 குடும்பங்களைச் சேர்ந்த 201,875 பேர் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.




