இலங்கை வங்கி கட்டமைப்பு ஆபத்தில் – ஒன்லைன் மூலம் இடம்பெறும் மோசடியால் நெருக்கடி
உக்ரேனிய, இந்திய மற்றும் பல்கேரிய இணையக் குற்றவாளிகள் நாட்டிற்குள் பிரவேசித்து தேசிய பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக நாட்டின் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படக்கூடும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவிடம் நேற்று அறிவித்துள்ளனர்.
இந்த குற்றத்தில் தொடர்புடைய இணையக் குற்றவாளிகள் எனக் கூறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உக்ரைன் இளைஞர்கள் இருவர், இணையக் குற்றவாளிகளின் வலைப்பின்னல் தொடர்புப்பட்டுள்ளமை குறித்து சிறப்பு விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இணையம் மூலம் நடக்கும் மோசடிக்கு, அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டவர்கள் இருவரும் பிரபல தனியார் வங்கியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு பரிசு வழங்குவதாகவும், ஒன்லைன் மூலம் வருமானம் ஈட்டு முடியும் எனவும் பேஸ்புக் மற்றும் டெலிகிராம் மூலம் விளம்பரம் செய்து, 36 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது..