இதய நோயாளர்களாகும் இலங்கையர்கள் – வைத்தியர் விசேட அறிவிப்பு

இலங்கையில் இதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் அதிகளவில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் அனிந்து பத்திரன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
காற்று மாசுபாடு அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆபத்தை குறைக்க வெளியில் நடமாடும் போது முடிந்தவரை முகக்கவசங்களை அணிய வேண்டும் என வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு மற்றும் இதய நோய் தொடர்பில் முறையான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 14 times, 1 visits today)