வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்!

குவைத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக தங்கியிருந்து வெளிநாட்டில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் இன்று(27.10) குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் குறித்த குழுவினர் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு தூதரக அதிகாரிகள் பொலிஸார், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நீதித்துறையுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
வந்தவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் வசிப்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)