இலங்கை

பணி நிமித்தம் இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்பும் செயற்பாடு நிறுத்தம்!

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இன்று (16) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர சுட்டிக்காட்டினார்.

மேலும் பேசிய வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர,

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பயணம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வரும் நாட்களில் நாங்கள் ஒரு முடிவை எடுக்க முடியும்.

குறிப்பாக இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள எங்கள் மக்கள் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தேவையான தொலைபேசி எண்களை நாங்கள் வழங்கியுள்ளோம். ஏதேனும் சிக்கல் நிறைந்த சூழ்நிலை ஏற்பட்டால், எங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. எங்கள் குடிமக்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை.” என தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்