இஸ்ரேலால் நாடு கடத்தப்பட்ட இலங்கையர் தப்பியோட்டம்
இஸ்ரேலால் நாடு கடத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் டெல் அவிவ் விமான நிலையத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக வேலைக்குச் செல்லாமல் இருந்தமை மற்றும் ஏனைய இலங்கையர்களை பாதிக்க முயற்சித்தமை உள்ளிட்ட சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் நாடுகடத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது இது நடந்ததாகத் தெரிவித்தார்.
அவர் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் அமைப்பொன்றின் மூலம் நிர்மாணத்துறையில் பணிபுரிந்ததாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின்படி கிடைத்த வேலை ஒதுக்கீட்டில் இருந்து வந்த அவர் கடந்த செப்டெம்பர் மாதம் பணியில் சேர்ந்தார்.
மினுவாங்கொடை, பொரகொடவத்த பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.