இந்திய விமான நிலையத்தில் கைதான இலங்கையர்கள் – சிக்கிய பெருந்தொகை தங்கம்

தங்க கடத்தல் மோசடியில் ஈடுபட்ட மூன்று இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் வைத்து சனிக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்தியாவில் பெங்களூரு நகரிலுள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் கொழும்பில் இருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற நிலையில் சுங்க அதிகாரிகளால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, ஆசனவாயிலில் தூள் போன்ற பொருட்களுடன் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 1,670.92 கிராம் ஆகும். இதன் மொத்த இலங்கை மதிப்பு 42,528,927 ரூபாய் (11,900,000 இந்திய மதிப்பு) ஆகும்.
(Visited 30 times, 1 visits today)