இலங்கை

வெளிநாடு ஒன்றில் காணாமல் போன இலங்கை இளைஞன் – உயிரிழந்துவிட்டதாக தகவல்

அபுதாபியில் சமையல்காரராகப் பணிபுரியும் இலங்கை இளைஞனை காணாமல் போயுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கவிந்து சத்சரா என்ற இளைஞன் குறித்து 10 நாட்களாக எந்தத் தகவலும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பத்தேகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட கவிந்து சத்சர என்பவர் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அபுதாபிக்கு சென்றிருந்தார்.

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த கவிந்து சத்சரவிடம் இருந்து கடந்த 6ஆம் திகதி முதல் எவ்வித தகவலும் இல்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உறவினர்கள் நடத்திய விசாரணையில் அவர் இறந்துவிட்டதாக வேலை பார்த்த நிறுவனம் தெரிவித்தது.

உடல் நலக்குறைவு அல்லது பணியிடத்தில் தகராறு இல்லாத கவிந்து காணாமல் போனது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தகவலுக்கமைய, மகன் உயிரிழந்துவிட்டால் அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிந்து, உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தலையிடுமாறு குடும்பத்தினர் பொறுப்பான அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!