FIFA உலகக் கிண்ண 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றில் அறிமுகமான இலங்கைத் தமிழர்!
																																		FIFA உலகக் கிண்ண 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றில் அவுஸ்திரேலியத் தேசியக் கால்பந்து அணியில் இலங்கையர் அறிமுகமாகியுள்ளார்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை என்ற இலங்கையர் அறிமுகமாகியுள்ளார்.
இவர் கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்ற போட்டியிலேயே அவுஸ்திரேலிய (Australia) தேசியக் கால்பந்து அணியில் அறிமுகமானார்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கொண்ட 23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை என்ற தமிழர், 2019ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவில் அடிலெய்டு யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார்.
2026 பிஃபா உலகக் கிண்ணத்தை நோக்கி அவுஸ்திரேலியா தனது பயணத்தைத் தொடரும்போது, நிஷான் வேலுப்பிள்ளையின் கோல் மூலம் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியக் கால்பந்து அணி, பிஃபா உலகக் கிண்ணத் தகுதி வாய்ப்பைத் தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 40 times, 1 visits today)
                                    
        



                        
                            
