இலங்கை

இலங்கை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலி (Update)

Update – கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த கார், கொள்கலனை முந்திச் செல்லச் செல்லும்போது, ​​காரின் இடது பக்கம் கொள்கலனில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதற்குள் இராஜாங்க அமைச்சரும் பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இராஜாங்க அமைச்சர் மற்றும் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

…………………………………………………………………………………….

இலங்கை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.

நள்ளிரவு கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் மற்றுமொருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அவரது மரணத்தை ராகம வைத்தியசாலையின் அதிகாரி உறுதி செய்துள்ளார்.

May be an image of car

May be an image of 1 person and car

May be an image of car and road

(Visited 52 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!